Thursday 28 July 2011

மருதாணி... மறுத்தாய் நீ

29 / 07 / 2011 - வெள்ளிக்கிழமை
பகல் தனிமையாக இருந்தது. மகியின் வெளியில் (ஸ்பேஸ்!!)  களைகட்டிக் கொண்டிருந்த 'ஸ்டஃப்ட் இட்லி' விநியோகக் கலகலப்பில் நானும் சந்தோஷமாக இணைந்து கொண்டு திரும்பினேன். (விரும்பினால் இங்கு போய்ப் பாருங்கள்.)

விடுமுறைக்குள் ஒருமுறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாகச் சுத்தம் செய்து விட நினைத்திருந்தேன்.
இன்று அதன் அடி ஆளத்தில் குறையாக இருந்த, 'ஸ்வீட் சில்லி...' என்னவோ ஒன்று (மூத்தவர் இப்படி எழுதி ஒரு சிவப்புத் திரவம் கொஞ்சம் ஒரு பழைய மாமைட் போத்தலில் வைத்திருந்தார்.)  அகப்பட்டது. வீசி விட்டேன், புதிதாகச் செய்துகொள்ளட்டும்.

கொஞ்சம் 'காட்டேஜ் சீஸ்', கொஞ்சம் தக்காளி பேஸ்ட், கொஞ்சம் வெஜிமைட் என்று அடிப் போத்தல்களில் இருந்தன. கடைசி ஒரு தண்டு செலரி, இரண்டு 'கார்லிக் ஸ்டிக்ஸ்', ஒரு துண்டு கோவா (cabbage) அகப்பட்டது. எல்லாவற்றையும் என் மதிய உணவோடு சேர்த்து முடித்துவிட்டேன். ஒரு 'ஸ்டர் ஃப்ரை' போட்டேன். அதில் இதெல்லாம் சேர்ந்து உள்ளே போய்விட்டது. ;)

ஃபிரிஜ் சுத்தம் செய்தாயிற்று.
செபாவின் கேக் இன்னும் மூன்று துண்டுகள் மீதி இருக்கின்றன; வைத்திருந்து அடுத்த திருமணநாள் அன்று சாப்பிடலாம்.

என் மருதாணிப் பெட்டியில் (இதுவும் குளிர்சாதனப் பெட்டியில் தான் இருக்கும்.) மீதம் இருந்த கோன் இரண்டையும் எடுத்து கை போன போக்கில் வைத்திருக்கிறேன்.
வலது கை ஒத்துழைக்க மறுத்தது. ;( இன்னும் வலி இருக்கிறது. கோன் பிடிக்க இயலவில்லை. ஆரம்பித்துவிட்டேனே, முடிக்காவிட்டால் எப்படி என்று ஒரு அரைகுறை வேலையாக முடித்து விட்டேன். ;(

உங்கள் விமர்சனத்துக்காக இங்கு...

38 comments:

  1. படங்கள் பெரிதாக்கி பார்க்க முடில..கை சிவந்ததையும் போட்டோ எடுத்து போட்டிருக்கலாம் இமா! ;)

    தாமரை எல்லாம் வரைந்திருக்கீங்க..பாரதீய ஜனதா பார்ட்டியா நீங்க?! ; )

    மயில் அழகா இருக்கு,நல்ல சிவப்பாச்சா?! :)

    எங்கே..சிவசிவா?! நாந்தான் பர்ஸ்ட்டுன்னு வந்து குதிப்பாரே! :) ;)

    ReplyDelete
  2. ஆகா அழகிய கைவர்ணங்கள் நேர்த்தியாக வரையப்பட்ட
    இந்த வர்ணங்கள் மிகவும் பிடித்திருக்கு வாழ்த்துக்கள்
    சகோதரி.பகிர்வுக்கும் மிக்க நன்றி நேரம் கிடைத்தால்
    என் தளம் வந்து செல்லுங்கள் .

    ReplyDelete
  3. குளிர்ச்சியும் அழகும் தரும் மருதாணி பற்றிய படங்கள் அருமை பாராட்டுக்கள்.


    "காது கொடுத்துக்கேட்டேன் .... ஆஹா
    குவா குவா சப்தம்" என்ற என் பதிவுக்கு வருகை தந்து கீழ்க்கணட கருத்துக்கூறியதற்கு நன்றிகள்.

    //இமா said...
    இறைவன் தாயுமான வரலாறு தொடர்பான படம் பெருப்பித்துப் பார்க்க முயன்றேன். இயலவில்லை.//

    அந்தப்படத்தில் உள்ள எழுத்துக்கள் படிக்குமாறு பெரிதாக்கி வெளியிட முடியாமல் தான் இருந்தது. நான் பெரிதும் முயற்சி செய்தும் நடக்கவில்லை.

    இருப்பினும் அந்தப்படக்கதை பற்றி சுருக்கமாகக்கூறுகிறேன்:

    இரத்தினாவதி என்ற வணிககுலத்துப்பெண், மலைக்கோட்டை சிவன் மேல் மிகுந்த பக்தி கொண்டவள். கர்ப்பம் தரிக்கிறாள். பிரஸவ நேரம் நெருங்குகிறது.

    உதவிக்கு காவேரி பூம்பட்டினத்தில் உள்ள தன் தாயை திருச்சிக்கு அழைக்கிறாள். தாயும் வருகிறாள்.

    காவிரி நதியில் அப்போது வெள்ளப்பெருக்கு அதிகமாகிறது. கொள்ளிடம்+காவிரி நதிகளைக்கடந்து தான் அந்தக்காலத்தில், நடந்தே திருச்சிக்கு வரவேண்டும்.

    வெள்ளப்பெருக்கினால் தாயால் குறித்த நேரத்தில் தன் பெண் வீட்டுக்கு வந்து சேர முடியவில்லை.

    பிரஸவ வலியால் இரத்தினாவதி துடிக்கிறாள். தாயும் வராததால் கடவுளை மனமுருகி வேண்டுகிறாள்.

    கடவுளே இரத்தினாவதியின் தாய் போல உருவம் மாறி அவளுக்கு பிரஸவ நேரத்திற்கான உதவிகள் யாவும் செய்து, குழந்தையும் அழகாகப்பிறக்கிறது. பிரஸவித்த இரத்தினாவதியும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இவ்வாறு 4 நாட்கள் சென்றபின், வெள்ள நீர் கட்டுக்கு அடங்கியதால், உண்மையான தாய் ஓடி வந்து சேருகிறாள். அங்கு தன்னைப்போலவே வேறொருவள் இருப்பதைக் காண்கிறாள்.

    இரத்தினாவதியும் இரண்டு தாய்களையும் ஒரே நேரத்தில் கண்டு ஆச்சர்யப்பட்டு, திடுக்கிடுகிறாள்.

    அப்போது ஒரு தாய் மறைந்து அந்த இடத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் காட்சி அளித்து அருளுகிறார்கள்.

    இந்த திருச்சி மலைக்கோட்டை சிவன் இது போல தாயும் ஆனதால் அதன் பிறகு தாயுமானவர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

    இப்போது இந்தக்கதையைப்படித்த பிறகு அந்தப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கே அந்தப் படங்கள் என்ன சொல்லுகின்றன என்பது புரியக்கூடும்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  4. ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ....இமாக்கு மருதாணி போட்டாச்சூஊஊஊஊஊஊஊஊஊ? என்ன விஷேஷம் இமா???

    சூப்பராக வரைஞ்சிருக்கிறீங்கள், நல்ல நேர்த்தி, கொப்பியில் கீறினாலும் உப்பூடி வராதெனக்கு...

    ReplyDelete
  5. மயிலை மறக்க நினைச்சாலும்:)) ஆராவது ஒருவர் அப்பப்ப நிஞாஆஆஆஅபகப்படுத்திட்டே இருக்கிறீங்க:))... மயிலும் அழகூஊஊஊஊஊஊஊ..

    முத்தான முத்தல்லவோ.. முதிர்ந்துவந்த முத்தல்லவோ... கட்டான மலரல்லவோ.
    கடவுள் தந்த கொடையல்லவோ......

    .......................
    கோபால் அங்கிள்...

    //தாயுமானவர் // சூப்பர் விளக்கம், எனகே இப்போதான் தெரியும் இது(இந்துவாக இருந்தும்).

    ReplyDelete
  6. //எங்கே..சிவசிவா?! நாந்தான் பர்ஸ்ட்டுன்னு வந்து குதிப்பாரே! :) ;) //

    கிக்..கிக்..கீஈஈஈஈஈஇ... இந்தாங்க நல்ல பெரிய உருண்டைக் கல்லுகள் எல்லோரும் ரெடியாஆஅ.. அங்கின அங்கின ஒளிச்சிருங்க:)) லாஸ்டா வந்து .. நாந்தான் firstuuuuu எண்டு டூஊஊஊஊ சொல்லி முடிக்கமுன் பதம் பார்த்திடலாம்... ஆஆஆஆஆ மீ எஸ்ஸ்ஸ்ஸ், நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))).

    ReplyDelete
  7. //இந்தாங்க நல்ல பெரிய உருண்டைக் கல்லுகள் எல்லோரும் ரெடியாஆஅ.. அங்கின அங்கின ஒளிச்சிருங்க:)) லாஸ்டா வந்து .. நாந்தான் firstuuuuu எண்டு டூஊஊஊஊ சொல்லி முடிக்கமுன் பதம் பார்த்திடலாம்//


    ஒரு சின்ன பிள்ளைய அடிக்க 2 கல்லா ஹா..ஹா.. பிடிச்சி தண்ணிக்குள்ளே அமுக்கிடலாம் :-))

    ReplyDelete
  8. தாமரைக்கு மேலே ஒரு கேள்விக்குறி இருக்கே..???? :-))

    ReplyDelete
  9. //ஒரு சின்ன பிள்ளைய அடிக்க 2 கல்லா ஹா..ஹா.. பிடிச்சி தண்ணிக்குள்ளே அமுக்கிடலாம் :-)) //

    :)) தண்ணிக்குள்ள அமுக்கவெல்லாம் வாணாம்... ஜெய் கிச்சின்ல, ஒரு ரீ வாங்கிக் கொடுத்தாலே போதும்:)).

    //ஜெய்லானி said...

    தாமரைக்கு மேலே ஒரு கேள்விக்குறி இருக்கே..???? :-)//

    ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான கேள்விதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  10. //ஜெய் கிச்சின்ல, ஒரு ரீ வாங்கிக் கொடுத்தாலே போதும்:)).//

    க்கி...க்கி...ரெண்டுமே ஒன்னுதான் :-))

    கேள்விக்குறிக்குள் ஒரு தனிக்கதை இருந்தாலும் இருக்குமே :-))

    ReplyDelete
  11. ஐ..இன்னிக்கு இங்கே தீபாவளியா? இங்கதான் இருக்கீங்களா எல்லாரும்?? இதோ நானும் வந்துட்டேன்! :)

    ReplyDelete
  12. இமா,இமா,கொடுத்து "சிவந்த" கை படத்தைப் போடுங்கோவன்,இன்னேரம் சிவந்திருக்கோணும்!! எழும்பி வாங்கோ!

    அதிரா,கொஞ்சம் பலமா அடியுங்கோவன்,அவ்வ்வ்வ்,இமாவை அல்ல, உங்கட கையில் இருக்கும் தாரை-தப்பட்டைய சொன்னேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
    ;))))))))

    ReplyDelete
  13. மருதாணி அழகு.
    அகப்பட்டது. வீசி விட்டேன், புதிதாகச் செய்துகொள்ளட்டும்.// பாவம் ஒரு மனிதனின் சாப்பாட்டை தூக்கி எறிஞ்சும் போட்டு... யப்பா! என்ன ஒரு வில்லத்தனம்.


    //ஒரு சின்ன பிள்ளைய அடிக்க 2 கல்லா ஹா..ஹா.. பிடிச்சி தண்ணிக்குள்ளே அமுக்கிடலாம் :-))//இல்லையில்லை. அதிஸ் ஓட்டுற ப்ளேனிலை இருந்து தள்ளி வுட்டுடுடலாம். ஓக்கை.

    ReplyDelete
  14. ///ஒரு சின்ன பிள்ளைய அடிக்க 2 கல்லா ஹா..ஹா.. பிடிச்சி தண்ணிக்குள்ளே அமுக்கிடலாம் :-))//இல்லையில்லை. அதிஸ் ஓட்டுற ப்ளேனிலை இருந்து தள்ளி வுட்டுடுடலாம். ஓக்கை. ///அய்யோ பாவம்! காம்ப்ளான் குடி மாறாத ஒரு பச்சப்புள்ளைக்கு எதிரா இம்பூட்டு சதியா?!!!!! :)

    /பாவம் ஒரு மனிதனின் சாப்பாட்டை தூக்கி எறிஞ்சும் போட்டு... யப்பா! என்ன ஒரு வில்லத்தனம்./கி கி கி! அதானே?? வான்ஸ்,நல்லா அடிச்சுப் பேசுங்கோ! ;)

    ReplyDelete
  15. //அதானே?? வான்ஸ்,நல்லா அடிச்சுப் பேசுங்கோ! ;) // ஆஆ...நீங்களுமா..ஹா..ஹா.. அடிக்கிற அடியில இனி மீ ஃபஸ்டே சொல்லக்கூடாது :-))

    ReplyDelete
  16. ஆ..வைத்தியர் வந்துட்டார்! ச்சீ,ச்சீ ஜெய் அண்ணா வந்துட்டார்! :) நான் சிவாவுக்கு ஸப்போர்ட் பண்ணறேன். உங்கட மாமிகிட்டதான் அடிச்சு பேசச்சொன்னேன்.சரியாப் படிங்கோ.

    அப்புறம் எனக்கு இந்த மருந்து-சூரணம்-லேகியம் இதெல்லாம் எதும் வேணாம்,சுமாரா ஆரோக்கியமாவே இருக்கிறன்,விட்டுடுங்கோ!

    ReplyDelete
  17. //எனக்கு இந்த மருந்து-சூரணம்-லேகியம் இதெல்லாம் எதும் வேணாம்,சுமாரா ஆரோக்கியமாவே இருக்கிறன்,விட்டுடுங்கோ!//

    அட , ஸ்டஃப் இட்லிக்குள்ளே வேற ஏதாச்சும் (நம்ம ஆஹா சமையல் ஸ்டைலில் ) வச்சி குடுத்திடலாமுன்னு நினைச்சா வேனாமுன்னு சொல்றீங்களே :-)))

    ReplyDelete
  18. /அட , ஸ்டஃப் இட்லிக்குள்ளே வேற ஏதாச்சும் (நம்ம ஆஹா சமையல் ஸ்டைலில் ) வச்சி குடுத்திடலாமுன்னு நினைச்சா வேனாமுன்னு சொல்றீங்களே :-))) /ஹிஹி! நீங்க ரெசிப்பி மட்டும் குடுங்கோ,பத்திரமா நோட்ஸ் எடுத்துகிட்டு,நீங்க விருந்துக்கு வரைல உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா செய்து தரேன் அந்த 'ஆஹாஆஆஆ சமையல் ஸ்டஃப்ட் இட்லிய'! :)

    ReplyDelete
  19. மிக அருமையா வைத்து இருக்கீஇஙக் இமா
    மருதாணி கோ எல்லாம் செய்வே, மிக்சிங்கும் சூப்பரா செய்வேன் ஆனால் டிசைன் தான் இது வரை இந்தியா மேப் போல
    கடைசியில தொப்பி வைது முடித்துடுவேன்...
    இநத முறை ஊருக்கு போன போது
    நாலு பேர் சேர்ந்து என் கைக்கு மருதானி வைத்து டென்சானாகிட்டாங்க, அவ்வள்வு பொறுமையா கைய காண்பிச்சேனாம்

    ReplyDelete
  20. பதிவு போட அதிகம் அதிகம் விஷியம் இருக்கு ஆனால் எதுவுமே டைப்பன தான் மனமில்லை

    ReplyDelete
  21. மதிப்புக்குரிய கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு,

    முதலில் இந்த இடுகை பற்றிய தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    இங்கு தாயுமானவர் கதையைப் படித்தபின் மீண்டும் உங்கள் வலைப்பூவிற்குச் சென்று படங்களைப் பார்வையிட்டேன். விபரம் புரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

    குறிப்பிட்ட இடுகையின் கீழும் உங்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete
  22. மகி,

    //படங்கள் பெரிதாக்கி பார்க்க முடில.// ;( முதல் முறையாக அலைபேசியில் படம்பிடித்து இங்கு ஏற்றி இருக்கிறேன். அதே அளவுகளிலேயே கொடுக்க வேண்டி இருந்தது. இங்கு இருப்பது போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் தான் வந்து இருக்கிறது, காரணம் தெரியவில்லை. அதே போல் வலைப்பூவில் பெருப்பிக்கவும் இயலவில்லை. பெரிதாகப் போட முயன்றேன், தெளிவில்லாமல் இருக்கிறது. ;((

    ReplyDelete
  23. //கை சிவந்ததையும் போட்டோ எடுத்து// கர்ர் கர்ர் கர்ர். போற இடத்தில எல்லாம் இதையே சொல்லிக் கடுப்பேத்துறீங்க. சிவக்காது என்று முன்னாலயே தெரிஞ்சா சொல்லி இருக்கலாம்ல. ;(

    //பாரதீய ஜனதா பார்ட்டியா// இங்க அதெல்லாம் இல்ல. ;)

    //நல்ல சிவப்பாச்சா?// திரும்ப!!! க்ர்ர்ர்ர்ர்

    //எங்கே..சிவசிவா?// ;) நீங்க இங்க முதல் கமண்ட் போட்ட நேரமும் இங்கதான் இருந்தார் மகி. அதுக்குள்ள... மனசுக்குள்ள எச்சரிக்கை மணி அடிச்சு இருக்கு. ;))

    ReplyDelete
  24. நல்வரவு அம்பாளடியாள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நிச்சயம் உங்கள் வலைப்பூ பக்கம் வருவேன்.

    ReplyDelete
  25. ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ

    பார்க்க கண்ணை என்னவோ செய்யுது அதீஸ். ஒருக்கா பாருங்கோவன்.

    //கொப்பியில் கீறினாலும் உப்பூடி வராதெனக்கு... // சும்மா சொல்லப் படாது. நீங்கள் நல்லாக் கீறுவீங்கள், எனக்குத் தெரியும்.

    கதை உங்களுக்கும் இப்பதான் தெரியுமோ?

    ReplyDelete
  26. மருதாணி டிசைன் அருமை சகோதரி

    ReplyDelete
  27. /ஜெய் கிச்சின்ல, ஒரு ரீ வாங்கிக் கொடுத்தாலே போதும்:)).//
    ஒகே .வெறும் டீ நல்லா இருக்காது ,கூட சுட சுட வெங்காய பஜ்ஜியும் .

    ReplyDelete
  28. ஹென்னா அழகா வரைஞ்சிருக்கீங்க இமா .

    ReplyDelete
  29. மகியோட சேர்ந்து நல்லாத் தீபாவளி கொண்டாடினீங்களோ எல்லாரும்? ;)

    //கொடுத்து "சிவந்த" கை படத்தைப் போடுங்கோவன்,இன்னேரம் சிவந்திருக்கோணும்!!// க்ர்ர்ர்ர் ம். கத்தி வெட்டி சிவந்து இருக்கு நல்லா. ;)) படத்தை போட விரும்பேல்ல.

    //கொஞ்சம் பலமா அடியுங்கோவன்,அவ்வ்வ்வ்,இமாவை அல்ல, உங்கட கையில் இருக்கும் தாரை-தப்பட்டைய சொன்னேன்! // க்ர்ர் க்ர்ர் க்ர்ர் காது அடைச்சுப் போய் இருக்குது. வெடிக்க வைச்சுப் போடாதைங்க மக்கள்ஸ். ;)

    //யப்பா! என்ன ஒரு வில்லத்தனம்.// இருங்கோ, 'A' 'J' எல்லாம் வளரட்டும் வான்ஸ். ;)

    ReplyDelete
  30. வாங்க ஜலீ. நீங்க எல்லோரும் 'அங்க' பேசினதைப் பார்த்து வந்த ஆசைலதான் நானும் மருதாணி வைக்க ஆரம்பிச்சேன். ட்ராடிஷனல் டிசைன்லாம் எனக்கு வரல. இப்புடி ஃப்ரீ ஹாண்ட்தான் சரி.

    ReplyDelete
  31. //ஆஹா.. அற்புதம் // கிக் கிக்

    எதைச் சொல்றீங்க ராஜேஷ்!! நான் சீரியசா கமண்ட் வாசிச்சுக் கொண்டு வந்து... திடீரெண்டு //ஆஹா.. அற்புதம் // எண்டு வாசிச்சதும் சிரிச்சிட்டேன்.
    எது அற்புதம்! இங்க போட்டு இருக்கிற கமண்ட்ஸ்தானே? ;))

    இந்த தீபாவளிக்கலாட்டாவில கவனம் செலுத்தாம கருமமே கண்ணாக இடுகை மட்டும் படிச்சு கமண்ட் சொல்லுற ஆட்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

    தொடர்ந்து வாங்கோ ராஜேஷ். இவங்களோட சேராதைங்கோ. ;)

    ReplyDelete
  32. பாராட்டுக்குக்கு மிக்க நன்றி ரமேஷ் & ஏஞ்சல். ;)

    ReplyDelete
  33. அன்பு இமா... இங்க கமெண்ட் போட முடியாம இத்தனை நாளா நானா தவியா தவிச்சுட்டேன் ;( ஏன்னா ஹென்னா அத்தனை அழகா இருக்கு... சொல்லாம இருக்கவே முடியல தெரியுமா... என்னடா பதிவு போட முடியலன்னு தவிச்சுட்டேன். சம சூப்பரா இருக்கு. உங்க ஹென்னாவில் ஒரு ட்ரெடிஷனல் டச் இருக்கு. அது பொதுவா இப்ப ஹென்னா போடும் யாருக்கும் இருப்பதில்லை... அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கலக்கிருக்கீங்க - வனிதா

    ReplyDelete
  34. ஒன்று மட்டும்தான் எனக்கு புரியுது இமா.அதுதான் உங்க ஹென்னா மிக அழகாக இருக்கு. மிக அருமையாக வரைந்து இருக்கிறீர்கள்.அதில உங்கட முகம்தான் தெரியுது."கையிலே கலைவண்ணம் கண்(டேன்)டார்." இந்தப்பாட்டு ஞாபகம் வந்துட்டுது.

    இப்பவாவது உண்மை வெளிவந்துதே.

    ReplyDelete
  35. மருதாணி மங்கையே பாராட்டினது சந்தோஷம். ;) நன்றி வனி.

    நீங்கள் வாங்கோ, உங்களுக்கும் வைச்சு விடுறன் அம்முலு. ;)

    ReplyDelete
  36. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா